6வது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் புதிய தொழில் நுட்பங்கள்
2023-11-05 14:23:58

6ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி நவம்பர் 5ஆம் நாள் ஷாங்காயில் துவங்கியது. 154 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். உலகத்தில் இறக்குமதி கருப்பொருள் கொண்ட முதலாவது தேசிய நிலை பொருட்காட்சி இதுவாகும். 5 முறை நடத்தப்பட்டுள்ள இப்பொருட்காட்சியில், 2000க்கும் மேலான பிரதிநிதித்துவம் வாய்ந்த புதிய உற்பத்திப் பொருட்கள், தொழில் நுட்பங்கள் மற்றும் சேவைகள் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டின் பொருட்காட்சியில், 442 புதிய உற்பத்திப் பொருட்கள், தொழில் நுட்பங்கள் மற்றும் சேவைகள் முதன்முறையாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பொருட்காட்சியின் முக்கியப் பகுதியான ஹோங்ச்சியௌ சர்வதேசப் பொருளாதார மன்றக்கூட்டத்தில், இவ்வாண்டு 22 கிளை கருத்தரங்குகள் நடத்தப்படும்.