போர் நிறுத்தத்துக்கு அரபு நாடுகள் வேண்டுகோள்
2023-11-05 15:50:33

அரபு நாடுகள் மற்றும் பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நவம்பர் 4ஆம் நாள் ஜோர்டானின் தலைநகரில் நடைபெற்றது. ஜோர்டான், எகிப்து, சௌதி அரேபியா, அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர் நிலை அதிகாரிகள், பாலஸ்தீன விடுதலை அமைப்பின் செயற்குழுவின் தலைமைச் செயலாளர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்துக்குப் பிறகு அவர்கள் அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் இணைப்புக் கூட்டம் நடத்தினர்.

காசா பகுதியில் போர் நிறுத்தத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று அரபு நாடுகள் வேண்டுகோள் விடுத்ததோடு, பாலஸ்தீன மக்களை வெளியேற்ற முயலும் எந்தச் செயல்களையும் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளன.