சீனாவில் 4 புதிய உலக நீர்ப்பாசனத் திட்டப்பணி மரபுச் செல்வங்கள்
2023-11-05 12:29:08

சீனாவின் அன்ஹுய் மாநிலத்திலுள்ள ச்சீமென்யான் நீர்ப்பாசன அமைப்புமுறை, ஜியாங்சூ மாநிலத்திலுள்ள ஹோங்ச்சே பண்டைய நீர்ப்பாசனப் பகுதி, ஷன்சி மாநிலத்திலுள்ள ஹுவோச்சுவான் நீர்ப்பாசனத் திட்டப்பணி, ஹுபெய் மாநிலத்தின் சோங்யாங் மாவட்டத்திலுள்ள பாய்நீ பண்டைய நீர் தேக்கம் ஆகியவை நவர்பர் 4ஆம் நாள் 2023ஆம் ஆண்டிற்கான உலக நீர்ப்பாசனத் திட்டப்பணிகளின் மரபுச் செல்வப் பட்டியலில் வெற்றிகரமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை சீனாவில் உலக நீர்ப்பாசனத் திட்டப்பணி மரபுச் செல்வங்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச நீர்ப்பாசன மற்றும் வடிகால் ஆணையத்தின் 74ஆவது செயற்குழு கூட்டத்தில் இப்பட்டியல் வெளியிடப்பட்டது. சீனாவின் 4 புதிய மரபுச் செல்வங்களைத் தவிர, இந்தியா, இந்தோனேசியா, ஈராக், ஜப்பான், தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் 15 திட்டங்களும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.