6ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் துவக்க நிகழ்வில் லீ ச்சியாங் உரை
2023-11-05 16:45:56

சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங் நவம்பர் 5ஆம் நாள் 6ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி மற்றும் ஹோங்ஜியாவ் சர்வதேச பொருளாதார மன்றக்கூட்டத்தின் துவக்க நிகழ்வில் உரை நிகழ்த்தினார்.

சந்தை வாய்ப்புகளின் பெரும் திறப்பை சீனா தொடர்ந்து முன்னேற்றும் என்று அவர் தெரிவித்தார். மேலும், சந்தை வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ள எப்போதுமே தயாராகியுள்ள சீனா, இறக்குமதியை ஆக்கப்பூர்வமாக விரிவாக்கி, சரக்கு மற்றும் சேவை வர்த்தகத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை முன்னேற்றி, எல்லை கடந்த சேவை வர்த்தகத்துக்கு எதிர்மறை பட்டியலை செயல்படுத்தி, வெளி வர்த்தக முறை மற்றும் மாதிரிகளின் புத்தாக்கத்தை ஆதரித்து, எண்ணியல் வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் வலுவான புத்தாக்கப் போக்குடன் சீனா தொடர்ந்து திறப்புப் பணியை முன்னெடுத்துச் செல்லும். புத்தாக்கத் துறையில் அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பொருளாதாரத்துடன் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஒன்றிணைப்பை முன்னேற்றி, புத்தாக்க சாதனைகளின் பகிர்வை மேம்படுத்த சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் 5 ஆண்டுகளில் சீனாவின் சரக்கு மற்றும் சேவைகளின் இறக்குமதி 17 லட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.