சௌதி அரேபியா மற்றும் ரஷியாவின் கூடுதல் எண்ணெய் உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகள் நீட்டிப்பு
2023-11-06 14:31:18

இவ்வாண்டு இறுதி வரை கூடுதல் எண்ணெய் உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து நீட்டிப்பதாக நவம்பர் 5ஆம் நாள் சௌதி அரேபியாவும் ரஷியாவும் முறையே அறிவித்தன.

மாற்றங்களைச் செய்யலாமா என்பதைத் தீர்மானிக்கும் வகையில், கூடுதல் எண்ணெய் உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகள் அடுத்த மாதம் மதிப்பீடு செய்யப்படும் என்று அந்த நாடுகள் தெரிவித்தன.