காசா நகரத்தை முற்றிலுமாக சுற்றி வளைத்த இஸ்ரேல் படை
2023-11-06 09:57:39

இஸ்ரேல் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் படி, காசா நகரத்தை இஸ்ரேல் படை முற்றிலுமாக சுற்றி வளைத்து, காசா பகுதியை இரண்டாகப் பிரித்துள்ளது. அதே வேளையில், காசா நகரத்தின் வடக்குப் பகுதியிலிருந்து தென் பகுதிக்கு அப்பாவி மக்கள் வெளியேற இஸ்ரேல் படை இன்னும் அனுமதிக்கும் என்று இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ராணுவப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனில் ஹெகரி 5ஆம் நாள் கூறினார்.

காசா பகுதியில் இஸ்ரேல் படை தொடுத்த இராணுவ நடவடிக்கைகளில் 9770 பேர் உயிரிழந்தனர். 24 ஆயிரத்து 800 பேர் காயமடைந்தனர் என்று பாலஸ்தீனத்தின் காசா பகுதியிலுள்ள சுகாதார வாரியம் 5ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.