சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி, சீனா மற்றும் உலகத்திற்கு வளர்ச்சி வாய்ப்பு
2023-11-06 16:14:51

இவ்வாண்டு, சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணிக்கான 45ஆவது ஆண்டாகவும், தவிரவும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாகக் கட்டியமைப்பது முன்வைக்கப்பட்ட 10ஆவது ஆண்டாகவும் ஆகும். சிறப்பு அர்த்தம் வாய்ந்த இவ்வாண்டில், 6ஆவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 5ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் துவங்கியுள்ளது. உயர் தரமுள்ள கூட்டு வளர்ச்சியை சீனாவும் உலகமும் எப்படி கூட்டாக நனவாக்குவது என்ற ஒரு கேள்வி எழுந்தது.

இப்பொருட்காட்சியில் 442 புதிய உற்பத்திப் பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் வெளியிடப்படும். மேலதிக கொள்வனவு வணிகர்கள் இதில் கலந்துகொள்ள ஈர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், தரமுள்ள உற்பத்திப் பொருட்கள் மேலும் விரைவில் சீனச் சந்தையில் நுழையலாம். அத்துடன், சீனாவின் புதிய வளர்ச்சி, உலகத்திற்கு புதிய வளர்ச்சி வாய்ப்புக்களைக் கொண்டு வரும் என்பது திண்ணம்.

இப்பொருட்காட்சியில் பங்கெடுத்துள்ள 72 நாடுகளில், 64 ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாகக் கட்டியமைக்கின்ற நாடுகள் உள்ளன. 3400 தொழில் நிறுவனங்களில் மேற்கூறிய தொடர்புடைய தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 1500 தாண்டியது. இப்பொருட்காட்சியில் செய்யப்படும் ஒவ்வொரு முன்பதிவுகளும், மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய உதவுகிறன.

இப்பொருட்காட்சியில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக்கான எண்ணியல் வணிக ஒத்துழைப்பு முன்மாதிரி மண்டலம் ஷாங்காய் மாநகரத்தில் கட்டியமைக்கப்படுவதாக சீனா அறிவித்துள்ளது. மேலதிக நாடுகளின் மக்களுக்கு அதிக அருமையான எதிர்பார்ப்பு ஏற்படும்.

இப்பொருட்காட்சி, உலகளாவிய உற்பத்திப் பொருட்களைக் காட்டும் மேடையாகும். எதிர்காலத்தில், உலகப் பகிர்வு ரீதியில் சர்வதேச பொது உற்பத்திச் சேவையை இப்பொருட்காட்சி விநியோகிக்கும். திறப்பு தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்க இப்பொருட்காட்சி விரைவுபடுத்தும். புவிசார் மோதல் தீவிரமாகிய போது, வர்த்தகப்பாதுகாப்பு தலை தூக்கி, உலகப் பொருளாதார மீட்சி வலுவற்ற பின்னணியில், இப்பொருட்காட்சி மேலதிகமான நம்பிக்கையையும் ஆற்றலையும் கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.