சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் அமெரிக்க வேளாண்மை அமைச்சகம் பங்கெடுப்பு
2023-11-06 10:10:41

இந்த ஆண்டு அமெரிக்க வேளாண்மை அமைச்சகம் தலைமையிலான பிரதிநிதிக் குழு சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் முதல் முறையாக பங்கேற்றுள்ளது என்று சீனாவுக்கான அமெரிக்கத் தூதரமும் அமெரிக்க சோயா அவரை ஏற்றுமதி சங்கமும் தகவல் தெரிவித்துள்ளன.

இப்பொருட்காட்சியின் அமெரிக்க உணவு மற்றும் வேளாண் அரங்கில் கலிபோர்னியா, இடாஹோ மற்றும் ஜார்ஜியா மாநிலங்களின் வேளாண் உற்பத்திப் பொருட்கள் மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் முக்கியமாக பரிந்துரை செய்யப்படும். அதே வேளையில், வேளாண் உற்பத்திப் பொருட்கள் முதலிய துறைகளில் கொள்முதல் மற்றும் ஒத்துழைப்புக்கான கையெழுத்திடும் விழா நடைபெறும்.

அமெரிக்காவைத் தவிர, இந்த ஆண்டு தாய்லாந்து, செர்பியா, கசகஸ்தான் முதலிய நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் அனுப்பிய பெரிய அளவிலான பிரதிநிதிக் குழுக்கள் இப்பொருட்காட்சியில் பங்கேற்றுள்ளன.