காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகம்
2023-11-07 10:25:51

உலக அறிவுசார் சொத்துரிமைக்கான குறிக்கோள் பற்றிய அறிக்கையை உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு நவம்பர் 6ஆம் நாள் வெளியிட்டது. இந்த அறிக்கையின் படி, 2022ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 34 இலட்சத்து 60 ஆயிரம் அறிவுசார் காப்புரிமைகள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்ததோடு வரலாற்றில் மிக உயர் பதிவை உண்டாக்கியுள்ளது. . அதே வேளையில், நிதானமற்ற புவியமைவு அரசியல் மற்றும் உறுதியற்ற பொருளாதார எதிர்காலம் ஆகியவை உலகளாவிய அறிவுசார் சொத்து சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதிக்கக்கூடும் என்று உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் தலைமை இயக்குநர்  தாழென் தாங் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தார்.

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஜெர்மனி ஆகியவை 2022ஆம் ஆண்டில் மிக அதிகமான காப்புரிமைகளை விண்ணப்பித்த நாடுகளாகும். 2022ஆம் ஆண்டில் சீனாவில் சுமார் 15 இலட்சத்து 80 ஆயிரம் அறிவுசார் காப்புரிமைகள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை 31.6% அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் உலகளாவிய காப்புரிமை விண்ணப்ப வளர்ச்சியின் முக்கிய இயககாற்றலாகச் சீனாவும் இந்தியாவும் உள்ளன.