2023ஆம் ஆண்டு வூட்சென் உச்சி மாநாட்டில் புதிய அம்சங்கள்
2023-11-07 19:30:35

2023ஆம் ஆண்டு உலக இணைய மாநாட்டைச் சேர்ந்த வூட்சென் உச்சி மாநாடு நவம்பர் 8 முதல் 10ஆம் நாள் வரை சேஜியாங் மாநிலத்தின் வூட்சென் வட்டத்தில் நடைபெறவுள்ளது.

துவக்க விழா, முழு அமர்வு ஆகியவற்றைத் தவிர, எண்ணியல் ஒத்துழைப்பு, எண்ணியல்மயமாக்கம் மற்றும் பசுமைமயமாக்கத்தின் வளர்ச்சி முறை மாற்றம், தரவுகளின் மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, 20 கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.

மேலும், உலக இளைஞர் தலைவர்கள் திட்டம் நடப்பு உச்சிமாநாட்டில் முதன்முறையாக உருவாக்கப்படும். இணையத் துறையில் தலைசிறந்த இளைஞர்கள் பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கான சர்வதேசப் பரிமாற்ற மேடை இதுவாகும். தவிரவும், வூட்சென் உலக இணைய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சியகம் இவ்வுச்சி மாநாட்டின்போது அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட உள்ளது. உலகத்தில் இணையத்தைக் கருப்பொருளாகக் கொண்ட முதலாவது பெரிய அறிவியல் தொழில் நுட்ப அருங்காட்சியகமாக இது திகழும்.