கிழக்குப் பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் நிவாரணம் மற்றும் பணிகள் அமைப்பைச் சேர்ந்த 88 பணியாளர்கள் உயிரிழப்பு
2023-11-07 16:15:18

அக்டோபர் 7ஆம் நாளிலிருந்து பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் காரணமாக, கிழக்குப் பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் நிவாரணம் மற்றும் பணிகள் அமைப்பைச் சேர்ந்த 88 பணியாளர்கள் உயிரிழந்தனர் என்று ஐ.நா.வின் நிறுவனங்களுக்கிடையேயான நிரந்தரக் குழு நவம்பர் 5ஆம் நாளிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

மனித நேய விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐ.நா.வின் அலுவலகம், யுனிசெஃப், மனித உரிமைகளுக்கான ஐ.நா.வின் உயர் ஆணையர் அலுவலகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு முதலிய ஐ.நா.வின் முக்கிய அமைப்புகளின் பொறுப்பாளர்களால் இவ்வறிக்கை கூட்டாக கையெழுத்திட்டது. "ஒரே ஒரு மோதலில் ஐ.நா.வால் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த உயிரிழந்த பணியாளர்களின் எண்ணிக்கையை" இது குறிக்கிறது என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டது.