5 முக்கிய மாநிலங்களில் ட்ரம்பை விட ஜான் பைடனுக்கான ஆதரவு குறைவு
2023-11-07 16:01:00

நியூயார்க் டைம்ஸ், சியனா கல்லூரி ஆகியவை கூட்டாக நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுக்கு இணங்க, அமெரிக்க பொதுத் தேர்தலுக்கு முக்கிய பங்களிக்கும் 6 மாநிலங்களில் உள்ள 5 மாநிலங்களில், ஜனநாயக் கட்சி சார்பில் போட்டியிட உள்ள ஜான் பைடனுக்கு கிடைத்துள்ள ஆதரவு விகிதம், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால் ட்ரம்பை விட குறைவாக உள்ளது. முன்னதாக, தற்போதைய அரசுத் தலைவர் ஜான் பைடன், முன்னாள் அரசுத் தலைவர் டோனால்டு  ட்ரம்பு ஆகிய இருவரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

 வயது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி பிரச்சினை முதலியவை காரணங்களாக, ஜான் பைடன் தொடர்ந்து அமெரிக்க அரசுத் தலைவராக பணியாற்ற முடியுமா என்ற ஐயம் எழுந்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.