சர்வதேச அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்புக்கு சீனா முன்னெடுப்பு
2023-11-07 16:59:42

அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பரிமாற்றத்துக்கான முதலாவது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மாநாடு நவம்பர் 7ஆம் நாள் சோங்சிங் மாநகரில் நிறைவுற்றது. இதில், சர்வதேச அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பு முன்மொழிவை சீனா முதன்முறையாக முன்வைத்தது. திறப்பு, சமத்துவம், நியாயம், பாகுபாடின்மை ஆகியவை கொண்ட கருத்தை சீனா ஆதரித்து செயல்படுத்துவதோடு, அறிவியலுக்கு தேசிய எல்லை இல்லாமல் மனிதகுலத்துக்கு நன்மை புரிய வேண்டும் என்பதில் நிலைத்து நின்று, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துக்கான பொது சமூகத்தின் கூட்டுக் கட்டுமானத்துக்கு பாடுபட்டு வருகிறது.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுக்கோப்புக்குள் அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புத்தாக்க ஒத்துழைப்புகளின் சாதனைகள் நடப்பு மாநாட்டில் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. தரவுகளின்படி, சீனா 80க்கும் மேற்பட்ட கூட்டாளி நாடுகளுடன் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை உருவாக்கியுள்ளது.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு மூலம், பல துறைகளில் பன்முக தொடர்புகளை உருவாக்கி, உலகின் செழுமையான வளர்ச்சிக்கு நேர்மறை ஆற்றலை ஊட்டியுள்ளதாக உலக பொறியியல் அமைப்புகளின் சம்மேளத்தின் தலைவர் தெரிவித்தார்.