சீனாவில் நடைமுறைக்கு வந்த பொது ஒப்பந்தம்
2023-11-07 18:56:16

வெளிநாட்டு அதிகார ஆவணங்களுக்கான சான்றிதழ் அளித்தல் தேவையின் நீக்கம் பற்றிய பொது ஒப்பந்தம் நவம்பர் 7ஆம் நாள் முதல் சீனாவில் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, சீனாவுக்கும் ஒப்பந்த நாடுகளுக்கும் இடையே அதிகார ஆவணங்களின் எல்லை கடந்த பயன்பாட்டுக்கு, வெளியுறவுத் துறை மற்றும் தூதரகத்தின் இரட்டை சான்றிதழ் நடைமுறை தேவையில்லை. அதோடு, பொது ஒப்பந்தத்தின் கட்டுக்கோப்பின் கீழ் கூடுதல் சான்றிதழை அடிப்படையாகக் கொண்ட புதிய மாதிரி தொடங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சீன மற்றும் வெளிநாட்டு குடிமக்களும் தொழில் நிறுவனங்களும் சான்றிதழ்களைப் பெறுவதற்கான நேரமும் பொருளாதாரச் செலவும் பெரிதும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1965ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தத்தில் தற்போது 125 நாடுகள் இணைந்துள்ளன. 2023ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் சீனா இதில் இணைந்தது.