சீனாவின் தாராள வர்த்தக செயல்விளக்க மண்டலத்தின் பங்கிற்கு ஐ.நா.வின் பாராட்டு
2023-11-07 16:02:26

அமைப்புமுறை ரீதியான புத்தாக்கம், தொழில்துறையின் மேம்பாடு மற்றும் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு ஆகியவற்றில் சீனாவின் தாராள வர்த்தக செயல்விளக்க மண்டலங்களின் பங்கு பற்றிய அறிக்கை, ஐ.நா.வின் வணிகம் மற்றும் வளர்ச்சி கழகத்தால் சமீபத்தில் வெளிப்பட்டது.  கடந்த பத்து ஆண்டுகளில் சீனாவின் தாராள வர்த்தக செயல்விளக்க மண்டலங்கள் படைத்த சாதனைகளுக்கு இவ்வறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சீனாவின் தனித்துவமான முன்முயற்சியாக, தாராள வர்த்தக செயல்விளக்க மண்டலம், சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்புகளை ஆழப்படுத்தியுள்ளது என்று இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.