சீன வணிக அமைச்சம் எதிர்ப்பு தெரிவித்தல்
2023-11-07 15:24:58

அண்மையில், சீனாவின் சில நிறுவனங்கள் ரஷியாவுடன் தொடர்புடையவை என்ற சாக்குப்போக்கில், அவற்றைச் சிறப்புப் பெயர்ப் பட்டியலில் அமெரிக்க நிதித் துறை சேர்த்துள்ளது.

இது குறித்து சீன வணிக அமைச்சகம் கூறுகையில், அமெரிக்காவின் இச்செயல், ஒரு தரப்பு தடை நடவடிக்கையாகவும் மோலாதிக்க நடவடிக்கையாகவும் விளங்குகிறது. இது, சர்வதேச வர்த்தக ஒழுங்கு மற்றும் விதிகளுக்குத் தீங்கு விளைவிக்கும். அது மட்டுமல்லாமல், இது, உலகத் தொழில் சங்கிலியின் பாதுகாப்பு மற்றும் நிதானத்தைப் பாதிக்கும். இதற்கு சீனத் தரப்பு வன்மையான மனநிறைவின்மையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.