சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் அதிகரிப்பு
2023-11-07 17:01:36

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் நவம்பர் 7ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், சீனச் சரக்கு வரத்தகத்தின் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொகை 34 லட்சத்து 32 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. மொத்த அதிகரிப்பு வேகம் முந்தைய 0.2 விழுக்காடு குறைவிலிருந்து 0.03 விழுக்காடு உயர்வாக மாறியுள்ளது.

தற்போது சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் துறை ஆக்கப்பூர்வமாக உள்ளது. இதனால், அக்டோபரில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொகை கடந்த ஆண்டின் அக்டோபரை விட அதிகம் என்று இப்பணியகத்தின் புள்ளிவிவரப் பிரிவின் தலைவர் தெரிவித்தார்.

மேலும், அரசு சாரா தொழில் நிறுவனங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொகை ஒட்டுமொத்த நிலையை விட அதிகம். ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட பாரம்பரிய சந்தைகளிலிருந்து சீனாவின் இறக்குமதி தொகை அதிகரித்துள்ளது.

தவிரவும், சீனாவின் வர்த்தகச் சந்தையில் பல தரப்பட்ட வளர்ச்சிப் போக்கு தெளிவாக காணப்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவில் இணைந்துள்ள நாடுகளுக்கான சீனாவின் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொகை 15 லட்சத்து 96 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 3.2 விழுக்காடு அதிகரித்தது.