© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் அந்தோணி அல்பானீசை சந்தித்து பேசினார்.
“பல ஆண்டுகளில் பதற்ற உறவு நிலவியதால், வர்த்தக வளர்ச்சி தடைகளைச் சந்தித்த பிறகு, தற்போது இரு நாட்டு வெளியுறவில் புதிய நல்ல மாற்றம் துவங்கியதை இச்சந்திப்பு குறிக்கின்றது.” “புதிய அத்தியாயத்தை திறந்து வைக்க சீனாவும் ஆஸ்திரேலியாவும் ஒப்புக்கொண்டுள்ளன” போன்ற கருத்துக்கள் இச்சந்திப்பில் மிகுந்த கவனம் செலுத்திய மேற்கத்திய நாடுகளின் செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் ஒருவர் மீண்டும் சீனாவில் பயணம் மேற்கொள்வது இதுவாகும். கடந்த சில ஆண்டுகளில் சீன-ஆஸ்திரேலிய உறவு தேக்க நிலையில் சிக்கி வருகின்றது. அல்பானீசின் இப்பயணமானது, தடைகளை உடைத்து செல்லவும் அடுத்த 50 ஆண்டுகளில் புதிய எதிர்காலத்தை திறந்து வைக்கவும் உதவும் என்று ஆஸ்திரேலியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, தலைமையமைச்சரின் சீனப் பயணம், இரு நாட்டு உறவை "சரியான திசையில்" கொண்டுச் செல்ல வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் பல்வேறு துறையினர் விருப்பம் தெரிவித்தனர்.
சீனாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் வரலாற்று சர்ச்சைகள் இல்லை. அடிப்படை நலன்களில் மோதல் இல்லை. பரஸ்பர நம்பிக்கை, ஒன்றுக்கு ஒன்று ஆதரவு அளிக்கும் கூட்டாளியாக மாறுவதற்கு முற்றிலும் சாத்தியம் உள்ளது. இவ்வாண்டு முதல், திராட்சை மது, காற்றாலை மின் கோபுரம் உள்ளிட்ட வர்த்தக சர்ச்சைகள் குறித்து சீனாவும் ஆஸ்திரேலியாவும் நட்பார்ந்த முறையில் ஆலோசனைகளை நடத்தி, ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளன. டார்வின் துறைமுகத்தைச் சீன நிறுவனம் வாடகைக்கு வாங்குவதில் பாதுகாப்பு ரீதியான அபாயம் இல்லை என்று ஆஸ்திரேலிய அரசு தீர்ப்பளித்தது. கருத்து வேற்றுமைகளை உரிய முறையில் தீர்த்து, ஒத்துழைப்பில் கவனம் குவித்தால் இருந்தால், சீனா-ஆஸ்திரேலிய உறவில் புதிய சூழ்நிலை திறக்க வைக்கப்பட முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.
சீனாவில் பயணம் மேற்கொண்ட காலத்தில், 6ஆவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியின் துவக்க விழாவில் அல்பானீ பங்கேற்றார். இப்பொருட்காட்சியில் கலந்து கொண்ட சுமார் 200 ஆஸ்திரேலிய நிறுவனங்கள், சீனச் சந்தையின் மீது நம்பிக்கை தெரிவிக்கின்றன. கூடுதலாக, எதிர்காலத்தில், காலநிலை மாற்றம், பசுமைசார் பொருளாதாரம் முதலிய புதிதாக வளர்ந்து வரும் துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்புகளை விரிவாக்க இரு நாட்டுத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.