காசாவில் அப்பாவி மக்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச மனித நேயக் கூட்டத்தில் சீனப் பிரதிநிதி பங்கெடுப்பு
2023-11-08 17:15:45

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் நவம்பர் 8ஆம் நாள் கூறுகையில், மத்திய கிழக்கு பிரச்சினைக்கான சீனாவின் சிறப்புத் தூதர் ஜாய்ஜுன்,  நவம்பர் 9ஆம் நாள் பிரான்ஸில் நடைபெறவுள்ள காசா பிரதேச அப்பாவி மக்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச மனித நேயக் கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ளார். சர்வதேச சமூகத்துடன் இணைந்து, வெகு விரைவில் போர் நிறுத்தத்தை கொண்டு வருவது, அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கு மனித நேய உதவியை வழங்குவது, “இரு நாடுகள் தீர்வை”நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றுக்கு முயற்சிகளை மேற்கொள்ள சீனா விரும்புகிறது என்றார்.