ஐரோப்பாவின் மரபு வழி ஆயுதப் படை ஒப்பந்தத்தில் பங்கெடுக்க நேட்டோ தற்காலிகமாக நிறுத்தம்
2023-11-08 11:20:40

2023ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள் நள்ளிரவில், ஐரோப்பாவின் மரபு சார் ஆயுதப் படை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் தீர்மானத்தை ரஷியா நிறைவேற்றியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த ஒப்பந்தத்தின் செயல்பாட்டை அதன் உறுப்பு நாடுகள் தற்காலிகமாக நிறுத்துவதாக நேட்டோ 7ஆம் நாள் அறிவித்துள்ளது.

நேட்டோ அதே நாளில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஒப்பந்தம், ஐரோப்பா-அட்லாண்டிக் பாதுகாப்பு கட்டுகோப்புக்கு அடித்தள முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஒப்பந்தத்தை ரஷியா பின்பற்றாமல் பின்னணியில், நேட்டோ இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவது தொடரவல்லாதது ஆகும். இந்த ஒப்பந்தத்தின் செயல்பாட்டை இடைநிறுத்தும் முடிவுக்கு நேட்டோவின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.