இந்தியாவில் ஒற்றை மற்றும் இரட்டை பதிவு எண் அடிப்படையில் வாகன இயக்கம்
2023-11-08 14:56:27

பல நாட்களாக கடுமையான பனிப்புகை காரணமாக, இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் வரும் 13ஆம் முதல் 17ஆம் நாள் வரை ஒற்றை மற்றும் இரட்டை பதிவு எண் அடிப்படையில் வாகன இயக்கத்தை அமலாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இக்கட்டுபாட்டு நடவடிக்கையை மீறும் ஓட்டுநர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

கடுமையான காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக, புதுதில்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் 3ஆம் நாள் முதல் வகுப்புகளை நிறுத்தி 10 நாட்கள் வரை நீடிக்கும்.