கடல் சார் ஒத்துழைப்பு மற்றும் மேலாண்மை பற்றிய 4ஆவது கருத்தரங்கு
2023-11-08 17:39:38

கடல் சார் ஒத்துழைப்பு மற்றும் மேலாண்மை பற்றிய 4ஆவது கருத்தரங்கு நவம்பர் 8ஆம் நாள் துவங்கியது. இத்துவக்க விழாவில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங் யீ உரை நிகழ்த்துகையில், கடல் சார் பொது சமூகம் என்ற கருத்தைக் கடைப்பிடிக்கும் சீனா, சர்வதேச சமூகத்துடன் இணைந்து, அமைதி, செழுமை மற்றும் அழகுடைய கடலைக் கட்டமைத்து வருவதாகத் தெரிவித்தார்.

கடல் சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தி மேலாண்மையை முழுமையாக்குவது, பல்வேறு நாடுகளின் பொது விருப்பமும், கால ஓட்டத்துக்குப் பொருத்தமானதும் ஆகும். மனிதகுலத்தின் பொது தாயகமான கடலைக் கூட்டாகக் கட்டமைத்து பேணிக்காப்பதற்கு சீனா 4 முன்மொழிவுகளை வழங்கியுள்ளது. முதலில் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வில் ஊன்றி நின்று, கடல் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டும். இரண்டு, நீதி நியாயத்தைக் கடைப்பிடித்து, கடல் மேலாண்மை முறைமையை முழுமையாக்க வேண்டும். மூன்று, சூழலியலுக்கு முன்னுரிமையை வழங்கி, கடலின் தூய்மை மற்றும் அழகை நிலைநிறுத்த வேண்டும். நான்கு, கூட்டு வெற்றிக்கான ஒத்துழைப்பை மேற்கொண்டு, கடலுக்கு செழுமையைக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.