உலகப் புத்தாக்கத்துக்கு வாய்ப்புகளை வழங்கிய சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி
2023-11-08 18:30:33

ஷாங்காயில் நடைபெற்று வரும் 6ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில், புத்தாக்க உற்பத்திப் பொருட்கள் அதிகமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எண்ணியல் நுண்ணறிவு, பசுமை வளர்ச்சி உள்ளிட்ட துறைகளிலுள்ள முன்னேறிய தொழில் நுட்பங்களை இவை வெளிப்படுத்தியுள்ளன.

நடப்புப் பொருட்காட்சியில், 442 புதிய உற்பத்திப் பொருட்கள், தொழில் நுட்பங்கள் மற்றும் சேவைகள் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. 5 முறை நடத்தப்பட்டுள்ள இப்பொருட்காட்சியில், 2000க்கும் மேலான பிரதிநிதித்துவம் வாய்ந்த புதிய உற்பத்திப் பொருட்கள், தொழில் நுட்பங்கள் மற்றும் சேவைகள் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தில் இறக்குமதியைக் கருப்பொருளாகக் கொண்ட முதலாவது தேசிய நிலை பொருட்காட்சியான சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி, சீனாவும், பல்வேறு நாடுகளும் புத்தாக்க வளர்ச்சிக்கான ஆற்றலைக் கூட்டாக வளர்க்கின்ற தரமிக்க மேடையாக மாறியுள்ளது.

நீண்டகால வரலாற்றில், சீன மக்கள் எப்போதுமே புத்தாக்கத்தை நேசித்து வருகின்றனர். தற்போது, சீனாவில் நுகர்வு நிலை உயர்வு என்ற வளர்ச்சிப் போக்கு, நாடு கடந்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. மேலும், புத்தாக்கத்தின் மூலம் வளர்ச்சியைப் பெறுவது என்ற சீனாவின் வெற்றிகரமான திட்டம், வெளிநாட்டு வணிகர்களுக்கு புத்தாக்கத்துக்கான நல்ல சூழ்நிலையை வழங்கியுள்ளது.  

ஒவ்வொரு புதிய பொருளும், இனிமையான வாழ்க்கையின் மீதான மக்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது. சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி, வர்த்தக மேடையாக இருப்பதோடு, உலகப் புத்தாக்கத்துக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கியுள்ளது.