சீன-அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டுக் கலந்தாய்வு
2023-11-09 15:39:31

சீன வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த ஆயுதக் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் சுன் சியௌ பொ, ஆயுதப் பரவல் தடுப்புப் பணிக்கு பொறுப்பான் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் துணை செயலாளர் ஸ்டூவர்ட் ஆகிய இருவரும் நவம்பர் 6ஆம் நாளில், வாஷிங்டன் டிசியில் கலந்தாய்வு நடத்தினர்.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம், 5 அணு ஆயுத நாடுகளின் ஒத்துழைப்பு, அணு பாதுகாப்பு, ஆயுத பரவல் தடுப்பு மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாடு, உயிரி வேதியியல் ஒப்பந்தம், விண்வெளி பாதுகாப்பு, வழக்கமான இராணுவம் முதலியவை குறித்து இரு தரப்பினரும் ஆழமாகவும், வெளிப்படையாகவும், ஆக்கப்பூர்வமாகவும், கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர். தொடர்பு மற்றும் பரிமாற்றத்தை நிலைநிறுத்தி, பரஸ்பர நம்பிக்கையை அதிகரித்து, ஒத்த கருத்துக்களை வலுப்படுத்தி, கருத்து வேற்றுமையைக் கட்டுப்படுத்தி, ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கும் என்று இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.