சீனாவின் நிவாரண உதவிப் பொருட்கள் நேபாளத்திற்கு ஒப்படைப்பு
2023-11-09 14:52:44

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு சீனாவின் அவசரகால நிவாரண உதவி பொருட்கள் 8ஆம் நாள், அந்நாட்டின் போக்ரா பன்னாட்டு விமான நிலையத்திற்கு சென்றடைந்துள்ளது.

இந்த பொருட்களில் 600 கூடாரங்கள் மற்றும் 4600 கம்பளகள் அடக்கம்.

நேபாளத் துணைத் தலைமையமைச்சரும் உள் துறை அமைச்சருமான ஷ்ரேஸ்தா, அந்நாட்டுக்கான சீனத் தூதர் சென்சொங், நிவாரண உதவி பொருட்களின் ஒப்படைப்பு விழாவில் பங்கெடுத்து, ஒப்படைப்பு சான்றில் கையொப்பமிட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சீனாவின் இந்த உதவிப் பொருட்களை நேபாளம் வெகுவிரைவில் வினியோகிக்கும் என்று தெரியப்படுகிறது.