2023ஆம் ஆண்டிற்கான சீனாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பைச் சர்வதேச நாணய நிதியம் உயர்த்தியது
2023-11-09 15:46:20

மூன்றாம் காலாண்டின் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விட வலுவாக இருப்பது, சீன அரசு அண்மையில் தொடர்ச்சியான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றால் 2023ஆம் ஆண்டிற்கான சீனாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பைச் சர்வதேச நாணய நிதியம் உயர்த்தியுள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் துணைத் தலைமை இயக்குநர் கீதா கோபிநாத் அம்மையார் கூறினார்.

2023ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரம் 5.4% வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது. இது முன்னர் எதிர்பார்த்ததை விட அதிகமாகும். சீனப் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்பு குறித்து கோபிநாத் அம்மையார் கூறுகையில், ஆய்வும் புத்தாக்கமும் முக்கிய பங்காற்றும். நல்ல வணிகச் சூழலும் மனித மூலதனத் அடிப்படையும் சீனாவுக்கு உண்டு. மேலும் முதலீடு மூலம் ஏராளமான உள்கட்டமைப்புகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன என்றார்.