அமெரிக்காவுடன் மூலோபாய பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ரஷியாவின் நிலைப்பாடு
2023-11-09 16:52:47

மூலோபாய நிலைப்புத்தன்மை குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா விரும்புகிறது. ஆனால், ஒரு தரப்பு மற்றொரு தரப்பிடம் பாடம் கற்பிக்கும் முறையில் இப்பேச்சுவார்த்தை நடத்துவதை ரஷியா ஏற்றுக்கொள்ள முடியாது என்று ரஷிய அரசுத் தலைவரின் செய்தி செயலாளர் பெஸ்கோவ் 8ஆம் நாள் புதன்கிழமையன்று தெரிவித்தார்.

தற்போது, இப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்நிபந்தனைகள் இல்லை. ஆனால், இப்பேச்சுவார்த்தை மிகவும் அவசியமானதாக உள்ளது என்று ரஷியா கருதுவதாக அவர் தெரிவித்தார்.

தவிரவும், பின்லாந்து நேட்டோவில் சேர்த்துள்ளது, ஸ்வீடன் இவ்வமைப்பில் இணைவதை நேட்டோ முன்னேற்றி வருவது ஆகிய காரணங்களால், ஐரோப்பாவின் பாரம்பரிய ஆயுதப் படைகள் ஒப்பந்தத்தில் இருந்து விலக ரஷியா முடிவு எடுத்துள்ளதாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் 7ஆம் நாள் தெரிவித்தது.