எல்லை கடந்த சேவை வர்த்தகத்துக்கான எதிர்மறை பட்டியலை வெளியிடச் செயல்படும் சீனா
2023-11-09 19:28:37

சீனாவின் திறப்பு அளவைத் தொடர்ந்து விரிவாக்கும் வகையில்,  நாடளவிலும் தாராள வர்த்தகச் சோதனை மண்டலத்திலும் பயன்படும் எல்லை கடந்த சேவை வர்த்தகத்துக்கான எதிர்மறை பட்டியல்களை கூடிய விரைவில் வெளியிடுவதற்காக வணிக அமைச்சகம் தொடர்புடைய துறைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்று இவ்வமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நவம்பர் 9ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தாராள வர்த்தகச் சோதனை மண்டலத்தில் வெளிநாட்டு முதலீடு நுழைவுக்கான எதிர்மறை பட்டியலின் மூலம் அங்குள்ள சேவைத் துறையின் திறப்பு அளவு தேசிய நிலையை விட அதிகம். அடுத்த கட்டத்தில், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு வணிகச் சங்கங்கள் ஆகியவற்றின் கருத்து மற்றும் முன்மொழிவுகளை வணிக அமைச்சகம் கேட்டறிந்து, இம்மண்டலத்தில் அந்நிய முதலீடு நுழைவுக்கான எதிர்மறை பட்டியலைக் குறைப்பது பற்றிய மதிப்பீட்டுப் பணியை ஊக்குவித்து, உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பைத் தொடர்ந்து முன்னேற்றும் என்றும் அவர் கூறினார்.