இதர நாடுகளின் விவகாரங்களில் ஜி7 தலையிட கூடாது:சீனா
2023-11-10 19:06:27

ஜி7 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் அறிக்கையில் சீனா தொடர்பான அம்சங்கள் பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் நவம்பர் 10ஆம் நாள் கூறுகையில், ஐ.நா. சாசனத்தின் குறிக்கோள் மற்றும் கோட்பாட்டையும் சர்வதேச தொடர்புகளுக்கான அடிப்படை விதிகளையும் ஜி7 அமைப்பு கடைப்பிடித்து, சொந்த விவகாரங்களைக் கருத்தில் கொண்டு, இதர நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் செயலை நிறுத்துமாறு சீனா வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்தார்.

சீனாவின் இறையாண்மையை ஜி7 அமைப்பு சீர்குலைத்து, சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடும் தவறான செயலை சீனா உறுதியுடன் எதிர்க்கிறது. பிரிப்பைன்ஸ் முன்னெடுத்த தென் சீனக் கடல் நடுவர் தீர்ப்பு வழக்கு, பிரதேச இறையாண்மை மற்றும் கடல் எல்லை வரையறுத்தலுடன் தொடர்புடைய விவகாரமாகும். இதற்கான தீர்ப்பு சட்டவிரோதமாகவும் செல்லுபடியற்றதாகவும் உள்ளது. ஜ7 அமைப்பு இவ்வழக்கைப் பயன்படுத்தி எதிரெதிர் நிலையைத் தூண்டிய செயல், பிரதேச நாடுகள் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காக்கும் விருப்பத்துக்கு எதிரானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சின்ஜியாங், ஷிச்சாங், ஹாங்காங் ஆகியவை தொடர்பான விவகாரங்கள் சீனாவின் உள்விவகாரங்களாகும். இவற்றில் வெளிப்புற சக்தி தலையிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.