காசா பிரதேசத்தில் மருத்துவச் சிகிச்சை சேவை பெரிதும் பாதிப்பு :ஹமாஸ்
2023-11-10 14:33:25

உள்ளூர் நேரப்படி நவம்பர் 9ஆம் நாள், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்க செய்தி ஊடக அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு காசா பிரதேசத்திலுள்ள மருத்துவ வசதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை கண்டித்துள்ளது.

அக்டோபர் 7ஆம் நாள் தொடங்கிய, புதிய சுற்று இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் நிகழ்ந்ததற்குப் பிறகு, காசா பிரதேசத்தில் 18 மருத்துவமனைகளும், 46 மருத்துவ மையங்களும் மருத்துவச் சேவைகளை நிறுத்தியுள்ளன. இதனால், புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஹூமோடயாவிசிஸ் செய்ய முடியாமல் 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு, 50 ஆயிரத்திற்கும்  மேலான கர்ப்பினிகளாலும் உரிய பராமரிப்பு பெற முடியவில்லை.  தீரா நோய்களால் பாதிக்கப்பட்டு ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டும் சிகிச்சை பெற முடியாது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.