தேவை இருந்தால் தொடர்ந்து வட்டி அதிகரிக்க:அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தலைவர் கருத்து
2023-11-10 10:40:54

பண வீக்க விகிதத்தை 2 விழுக்காடாகக் குறைப்பற்கான நீண்டகால இலக்கை நனவாக்கும் வகையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தேவை இருந்தால் தொடர்ந்து வட்டியை அதிகரிக்கும் என்று அவ்வங்கியின் தலைவர் பாவெல் நவம்பர் 9ம் நாள் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இறுக்கமான நாணயக் கொள்கையைச் செயல்படுத்த பெடரல் ரிசர்வ் வங்கி பாடுபட்டு வருகிறது. ஆனால் திட்டமிட்ட இலக்கு இன்னும் நனவாகவில்லை. நாணயக் கொள்கையை மேலும் இறுக்க உகந்த நேரம் இருந்தால், தயக்கமின்றி செய்வோம் என்றும் தெரிவித்தார்.