சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, தென் கிழக்காசிய மற்றும் தெற்காசிய நாடுகளின் அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை
2023-11-10 19:58:10

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டத்தின் சாதனைகளைப் பகிர்ந்து கொள்வது என்ற தலைப்பில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, தென் கிழக்காசிய மற்றும் தெற்காசிய நாடுகளின் அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நவம்பர் 10ஆம் நாள் சீனாவின் குன்மிங் நகரில் நடைபெற்றது. தென் கிழக்காசிய மற்றும் தெற்காசியாவின் 18 நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேலான அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள், சிந்தனை கிடங்கு ஊடகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 150 பேர் இப்பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் சர்வதேச தொடர்பு துறையின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சிகளுடன், பசுமை பட்டுப்பாதை, எண்ணியல் பட்டுப்பாதை, ஊழலற்ற பட்டுப்பாதை ஆகியவற்றின் கட்டுமானத்தை முன்னேற்றி, மானுடவியல் பரிமாற்றம் மற்றும் மக்களின் தொடர்பை ஆழமாக்கி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் தரமிக்க கட்டுமானத்துக்கு அரசியல் ஆற்றலை ஊட்ட விரும்புகிறது என்றார்.