© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
புள்ளிவிவரங்களின் படி, 2023ஆம் ஆண்டின் ஜூன் வரை, இணையத்தளத்தின் மூலம் பொருட்களை வாங்கிய சீனப் பயனாளர்களின் எண்ணிக்கை 88.4 கோடியாகும். 2023 உலக இணைய மாநாட்டின் வூட்சென் உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட 2023ஆம் ஆண்டு சீன இணைய வளர்ச்சி அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தின் மூலம் சீனச் சில்லறை விற்பனையின் புதிய வணிக முறை பெரிதும் வளர்ந்து வருகின்றது. சில்லறை வணிகம் விரைவாக உயர்ந்துள்ளது. பரவல் செய்யப்பட்ட தொழில்களும் பொருட்களின் வகைகளும் தொடர்ந்து விரிவாக்கப்பட்டுள்ளன.
2022ஆம் ஆண்டில், முக்கியமாக கண்காணிக்கப்பட்ட தளங்களில் இணைய விற்பனை நேரலைகளின் மொத்த எண்ணிக்கை 12 கோடியைத் தாண்டியுள்ளது. 9 கோடியே 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட வணிகப் பொருட்கள் நேரலையின் மூலம் விற்பனை செய்யப்பட்டள்ளன.