அக்டோபரில் சீனாவின் வாகனங்கள் இரட்டை இலக்க வளர்ச்சி
2023-11-10 15:29:02

சீன வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் நவம்பர் 10ஆம் நாள் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின் படி, அக்டோபரில் உள்நாட்டு வாகனச் சந்தை இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.

அக்டோபரில் புதிய எரியாற்றல் வாகனங்களின் விற்பனைத் தொகை, 9 இலட்சத்து 56 ஆயிரமாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 33.5 விழுக்காடு அதிகமாகும். மேலும், ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 72 இலட்சத்து 80 ஆயிரம் புதிய எரியாற்றல் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 37.8 விழுக்காடு அதிகமாகும்.