புதிய யுகத்தில் ஷிசாங் தன்னாட்சிப் பிரதேசத்துக்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளின் நடைமுறையாக்கம் மற்றும் சாதனைகள்
2023-11-10 11:44:42

புதிய யுகத்தில் ஷிசாங் தன்னாட்சிப் பிரதேசத்துக்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளின் நடைமுறையாக்கம் மற்றும் சாதனைகள் பற்றிய வெள்ளையறிக்கை சீன அரசு நவம்பர் 10ஆம் நாள் வெளியிட்டது.

இந்த வெள்ளையறிக்கையில் புதிய வளர்ச்சி சிந்தனையின் நடைமுறையாக்கம், பண்பாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க  சாதனைகள், இனம் மற்றும் மதத் துறையில் முன்னேற்றங்கள், நிலையான சமூக வளர்ச்சி, உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு, ஜனனாயம் மற்றும் சட்டப்படியான ஆட்சி ஆகிய 6 பகுதிகள் இடம்பெற்றுள்ளன.  

நிதானம், வளர்ச்சி, உயிரின வாழ்க்கை சூழல், எல்லை பகுதி வளர்ச்சி ஆகிய 4 விடயங்களைச் செவ்வனே செய்வது என்பது, ஷிசாங் பிரதேசத்தின் நீண்டகால அமைதி, நிதானம் மற்றும் உயர்தர வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் இவ்வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.