லெபனானின் ஹிஸ்புல்லா கட்சியின் இராணுவ வசதிகளின் மீது இஸ்ரேல் தொடுத்த வான் தாக்குதல்
2023-11-10 10:23:31

லெபனானின் ஹிஸ்புல்லா கட்சியின் ஆயுதப் படையினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக அவ்வமைப்பின்  இராணுவ வசதிகளின் மீது வான் வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை நவம்பர் 9ஆம் நாளிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

ஹிஸ்புல்லா கட்சியைச் சேர்ந்த ஆயுதப் படையினர்களின் முகாம்கள், கண்காணிப்பு சாவடிகள், ஏவுகணை வசதிகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் படை இத்தாக்குதல் நடத்தியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.