சீன-அமெரிக்க உறவுக்குத் துணை புரியும் ஒத்திசைவுக் குழு பயணம்
2023-11-12 12:26:45

அமெரிக்காவின் பிலடெல்பியா ஒத்திசைக் குழு சீனாவில் பயணம் மேற்கொண்ட 50ஆவது ஆண்டு நிறைவுக்கான நிகழ்ச்சி நவம்பர் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

இதற்கு முன், இக்குழுவின் இயக்குநர் மத்தியாஸ் டார்னோபோல்ஸ் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்குக்கு அனுப்பிய கடிதத்தில்

பிலடெல்பியா ஒத்திசைக் குழுவின் சீன பயணம், இரு நாட்டுறவின் முக்கிய மைல்கல்லாகும் என்றார்.

இது குறித்து ஷி ச்சின்பிங் கூறுகையில்,

நாடுகளின் எல்லைக் கடந்த இசை, இரு நாடுகளுக்கிடையில் பாலத்தை உருவாக்கியது என்றார்.

2018ஆம் ஆண்டு அமெரிக்கா சீனாவின் மீது ஒரு சார்பாக தட நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு இரு நாட்டுறவு கடுமையாக மோசமாகியுள்ளது. புதிய பனி போர் பற்றிய கவலை சர்வதேச சமூகத்தில் எழுந்தது.

இவ்வாண்டு ஜுன் திங்களுக்கு பிறகு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், அமெரிக்காவின் நட்பார்ந்த நண்பர்களைச் சந்தித்து இரு நாட்டு மனித பண்பாட்டு தொடர்பை மீட்கும் விருப்பத்தையும் நம்பிக்கையையும் தெரிவித்தார்.

உலக செல்வாக்கை அதிகரிக்கும் சீனாவுடனான உறவை வளர்க்கும் புதிய வழிமுறையை அமெரிக்கா கண்டறிய வேண்டும் என்று ஆய்வாளர்கள் சிலர் தெரிவித்தனர்.