பாலஸ்தீனம் பற்றிய தீர்மானம்
2023-11-12 16:14:41

அரபு-இஸ்லாமிய நாட்டு தலைவர்களின் உச்சி மாநாட்டில் பாலஸ்தீன பிரச்சினை பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது என்று சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் நவம்பர் 11ஆம் நாள் தெரிவித்தது. காசா பிரதேசத்திலும் ஜோர்டன் ஆற்றின் மேற்குப் பகுதியிலும் இஸ்ரேல் ஏற்படுத்திய தாக்குதல்களுக்கு இத்தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கைப்பற்றிய உரிமைப் பிரதேசத்தில் பாலஸ்தீன மக்கள் சுதந்திரத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். பாலஸ்தீன பிரச்சினை, அரபு-இஸ்ரேல் நாடுகளில் முக்கிய இடத்தை வகிக்கின்றது என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஐ.நா பாதுகாப்பவை கட்டுப்படுத்தும் கொள்கையை வெளியிட வேண்டும். இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை அனைத்து நாடுகளும் நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.