அமெரிக்காவின் பீ-21 ரைடர் குண்டு வீச்சு விமானத்தின் முதல் பயணம்
2023-11-13 14:17:33

அமெரிக்க விமானப்படை அறிமுகப்படுத்திய புதிய தலைமுறை குண்டுவீச்சு போர் விமானமான பீ-21 ரைடர், நவம்பர் 10ஆம் நாள் கலிபோர்னியாவில் பரிசோதனை ரீதியான முதல் பயணத்தை நிறைவேற்றியது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட முதல் புதிய குண்டுவீச்சு போர் விமானம் இதுவாகும். முன்னதாக, இந்த திட்டம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டின் இறுதியில், அமெரிக்க விமானப்படை இவ்விமானத்தின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.