சீனாவை மாற்றுவதற்கு அமெரிக்கா முயற்சிக்கக் கூடாது
2023-11-13 17:37:15

சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் சந்திக்கும் முன், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாள் மாவ் நிங் அம்மையார் 13ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

அமெரிக்காவை மாற்றும் விருப்பம் சீனாவுக்கு இல்லை. சீனாவை மாற்றும் விருப்பம் அமெரிக்காவுக்கு இருக்கக் கூடாது என்றார்.

போட்டியிடுதல்களைக் கட்டுப்படுத்துவது, மோதல் இடர்பாடுகளைத் தடுப்பது, தொடர்பு வழிமுறையை உத்தரவாதம் செய்வது ஆகியவை, இம்முறை இரு நாட்டு அரசுத் தலைவர்களின் சந்திப்பின் நோக்கமாகும். கடந்த சில பத்து ஆண்டுகளில் அமெரிக்கா சீனாவை மாற்றிய முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு பிரிவின் உயர் நிலை அதிகாரி ஒருவர் 10ஆம் நாள் தெரிவித்தார்.

இரு நாட்டுறவு பற்றிய நெடுநோக்குதன்மை வாய்ந்த பிரச்சினைகள் மற்றும் உலக அமைதியுடன் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு நாட்டு அரசுத் தலைவர்கள் கருத்து பரிமாறுவர் என்று மாவ் நிங் அம்மையார் தெரிவித்தார்.