© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் நிறுவனம், உலக அளவில் இணையம் வழியாக மேற்கொண்ட கருத்து கணிப்பு முடிவின் படி, சீன-அமெரிக்க உறவின் நிதானத்தைப் பேணிக்காக்கும் வகையில், இரு நாட்டு தலைவர்களின் பாலி தீவு சந்திப்பில் எட்டப்பட்டுள்ள கருத்து ஒற்றுமையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 86 விழுக்காட்டினர் கருதுகின்றனர். 7 மாதங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் இருந்ததை விட இவ்விகிதம் 4.1 விழுக்காடு அதிகம்.
சீன-அமெரிக்க உறவை சீராக வளர்க்க விரும்பினால், ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து, பொது அக்கறை கொண்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று 91.2 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.
ஆங்கிலம், ஸ்பெனிஷ், பிராஞ்சு, அரேபியா, ரஷிய ஆகிய 5 மொழிகளில் மேற்கொள்ளப்பட்ட இக்கருத்து கணிப்பில் 10 ஆயிரத்துக்கும் மேலானோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.