போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்ட தோஹசாரி---காக்ஸ் பஜார் இருப்புப்பாதை
2023-11-13 14:02:16

வங்காளதேசத்தில் தோஹசாரி---காக்ஸ் பஜார் இருப்புப்பாதையின் தொடக்க விழா 11ஆம் நாள் நடைபெற்றது.  சீன நிறுவனங்கள் இந்த இருப்புப் பாதையின் கட்டுமானத்தில் பங்கெடுத்தது. இந்நிகழ்வில் வங்காளத்தேசத் தலைமையமைச்சர் ஷேக் ஹசீனா, வங்காளதேசத்துக்குச் சீனத் தூதர் யோவ் வென், வங்காளதேச இரயில்வே அமைச்சர் எம்.டி நூருல் இஸ்லாம் சுஜன் சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த இருப்புப்பாதை திறந்து வைக்கப்பட்ட பிறகு, வங்காளத்தேசத்தின் மிகப்பெரிய துறைமுக நகரமான சிட்டகாங்கிலிருந்து வங்காளதேச மற்றும் மியான்மரின் எல்லை நகரமான காக்ஸ் பஜார் செல்வதற்கான போக்குவரத்து நேரம் சுமார் 6 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாகக் குறையும். இது வங்காளத்தேசம் மற்றும் தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.