சீனாவில் விரைவு அஞ்சல் துறையின் வளர்ச்சி
2023-11-13 13:59:52

சீனத் தேசிய அஞ்சல் பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி 2023ஆம் ஆண்டின் நவம்பர் முதல் நாள் தொடங்கி 11ஆம் நாள் வரை, விரைவு அஞ்சல் வழியாக 526.4 கோடி பொதிகள் கையாளப்பட்டன. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 23.22 விழுக்காடு அதிகமாகும்.

நவம்பர் 11ஆம் நாள் அன்று மட்டும் விரைவு அஞ்சல் வழியாக 63.9 கோடி பொதிகள் கையாளப்பட்டன. "இரட்டை 11" ஷாப்பிங் திருவிழா காலகட்டத்தில், விரைவு அஞ்சல் வழியாக கையாளப்படும் பொதிகளின் எண்ணிக்கை மீண்டும் புதிய சாதனையைப் படைத்தது. இது நுகர்வோர் சந்தையின் விரிவாக்கத்திற்குப் பயனுள்ள முறையில் உதவியுள்ளதோடு,  சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் நெகிழ்வுத்தன்மை மற்றும் உயிர்ச்சக்தியையும்  முழுமையாகக் காட்டியுள்ளது.