சீன-அமெரிக்க அரசுத் தலைவர் உச்சிமாநாடு மீதான எதிர்பார்ப்பு
2023-11-13 16:09:08

சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு, இந்த வாரம், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டில், பாலி தீவில் நடைபெற்ற இரு நாட்டு அரசுத் தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு, நடைபெறப்போகும் முதலாவது சந்திப்பாக இது விளங்குகிறது. இச்சந்திப்பின் போது, சீன-அமெரிக்க உறவுக்கான நெடுநோக்கு, முழு நிலை, திசை ரீதியில் விவகாரங்கள் பற்றியும், உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய விவகாரங்கள் பற்றியும் இரு தரப்பினரும் ஆழமாக விவாதிப்பர்.

இந்த முறை சான்பிரான்சிஸ்கோ சந்திப்பில் ஒத்துழைப்பில் முக்கியக் கவனம் செலுத்தப்பட்டு, புதிய சாதனைகள் படைக்கப்பட வேண்டும் என்பது  சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இவ்வாண்டின் ஜூன் திங்களில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளது முதல் தற்போது வரை, இரு நாட்டுறவை தணிவுபடுத்தும் அறிகுறியை அமெரிக்கத் தரப்பு வெளிப்படுத்தியுள்ளது.

தற்போது, உலகப் பொருளாதாரத்தின் மீட்சி வலுவற்ற நிலையில் காணப்படுவதோடு, புவிசார் அரசியல் மோதல்களும் தீவிரமாகியுள்ளன. இதனால், உறுதியற்ற மற்றும் நிலையற்ற காரணிகள் அதிகரித்து வருகின்றன. உலகப் பொருளாதாரத்தில் சீன-அமெரிக்க பொருளாதாரத்தின் பங்கு மூன்றில் ஒரு பகுதியாகும்.  அதோடு,  இவ்விரு நாடுகளின் மக்கள் தொகை, உலகளவில் நான்கில் ஒரு பங்கினை வகிக்கிறது. இரு தரப்புகளின் வர்த்தகத் தொகை, உலகில் ஐந்தில் ஒரு பகுதியை வகிக்கிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு உலகின் ஒட்டுமொத்த நிலைக்கு ஏற்ப உயர் நிலை பார்வையில் சீன-அமெரிக்க உறவைக் கையாள வேண்டும் என்று  பாலி சந்திப்பின் போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

இந்த முறை இரு நாடுகளின் அரசுத் தலைவர்களின் சந்திப்பு, சீன தரப்பின் நல்லெண்ணத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளதோடு,  சீன-அமெரிக்க உறவு, உலக அமைதி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கு சீனாவின் மிகுந்த பொறுப்பைக் காட்டுவதாகவும் உள்ளன.  எனவே,   பெரிய நாடுகளுக்கிடையில் போட்டி போன்ற பழைய கருத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும். உள்நாட்டுக் கட்சிகளிடை கருத்து மோதல், அரசியல்வாதிகளின் சுயநலம் ஆகிய பாதிப்புகள் விலக்க வேண்டும். இருதரப்பு ஒத்துழைப்புகளை உண்மையாக நடைமுறைப்படுத்தி, பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.