சீன-அமெரிக்க மனித தொடர்பின் அதிகரிப்புக்கு சீனா விருப்பம்
2023-11-13 16:51:10

அமெரிக்க பிலடெல்பியா ஒத்திசைக் குழுவின் முதல் சீனப் பயணத்தின் 50 ஆண்டு நிறைவுக்கான இசை விழா அண்மையில் நடைபெற்றது. இதற்கு வாழ்த்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் கூறுகையில், சீன-அமெரிக்க நட்புறவை முன்னெடுக்கும் வகையில், இரு நாட்டு மனித தொடர்பு பரிமாற்றத்தைத் தொடர்ந்து ஆழமாக்கி அதிகரிக்க வேண்டுமென சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்த ஒத்திசைக் குழுவின் தலைமைச் செயல் அதிகாரிக்கு அனுப்பிய பதில் கடிதம் போல, இசையானது, நாடுகளைக் கடந்த கலை. பண்பாடு, நாடுகளிடையே பாலமாகத் திகழ்கிறது என்றும் மாவ் நிங் அம்மையார் தெரிவித்தார்.