சீனாவின் சின்சியாங் தாராள வர்த்தக சோதனை மண்டலத்தின் காஷ் மண்டலம் தொடக்கம்
2023-11-13 15:56:36

சீனாவின் சின்சியாங் தாராள வர்த்தக சோதனை மண்டலத்தின் காஷ் பகுதியின் திறப்பு விழா நவம்பர் 11ஆம் நாள் நடைபெற்றது.

இப்பகுதியானது, வேளாண் பொருட்களைப் பதனிடுதல், நெசவு மற்றும் ஆடை தயாரிப்பு, மின்னணு பொருட்கள் முதலியவற்றை முக்கியமாக வளர்க்கும். அதோடு, சர்வதேச சரக்குப் போக்குவரத்து சேவை, எல்லை கடந்த இணையவழி வர்த்தகம் முதலிய நவீன சேவைத் தொழில் துறைகளை ஆக்கப்பூர்வமாக வளர்க்கும் பணியிலும் ஈடுபடும். இப்பகுதியானது, மத்திய ஆசியா, தென்னாசியா உள்ளிட்ட சந்தைகளை ஒருங்கிணைத்து வணிகப் பொருட்கள் பதனீட்டு தளத்தை கட்டியமைப்பதோடு, அண்டை நாடுகளுடன் தொழில் துறை, மூலவளம், மனித திறமை, அறிவியல் தொழில் நுட்பம், பண்பாட்டுச் சுற்றுலா, கல்வி, மருத்துவச் சிகிச்சை, நாணயம் போன்ற துறைகளின் ஒத்துழைப்புகளை ஆழமாக்குவதை இம்மண்டலம் விரைவுபடுத்தும்.