சீன மக்கள் காசாவிலிருந்து வெளியேறினர்: வெளியுறவு அமைச்சகம்
2023-11-14 18:57:51

காசா பிரதேசத்தில் தங்கியிருந்த சீனர்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விக்கு, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் பதிலளிக்கையில், பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் தீவிரமாகிய பிறகு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, மோதல் நிகழ்ந்த பகுதியிலுள்ள சீன மக்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியது. சீனாவின் வெளிநாட்டுக்கான தூதரகங்களின் ஏற்பாடுகளுக்கிணங்க, அங்கிருந்த சீனர்களுடன் தொடர்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. பல்வேறு தரப்புகளின் முயற்சியுடன், சீனர்கள் அனைவரும் காசாவிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று தெரிவித்தார்.