சீன-தெற்காசிய புதிய வர்த்தக வழிபாதை
2023-11-14 11:33:22

சீனாவுக்கும் தெற்காசியாவுக்கும் இடையே ஒரு புதிய வர்த்தக வழிபாதையான லிஷி நுழைவாயில் நவம்பர் 13ஆம் நாள் முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. இத்துறைமுகம், சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் சிக்காச்செ நகரின் சொங்பா மாவட்டத்தைச் சேர்ந்த யரென் வட்டத்தில் அமைந்துள்ளது. இது, கடல் மட்டத்திலிருந்து 4772 மீட்டர் உயரத்தில் உள்ளது. இத்தன்னாட்சிப் பிரதேசத்தில் மிக உயரமுள்ள நுழைவாயிலாக இது விளங்குகிறது. நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டத்தில் நைச்சொங் நுழைவாயிலுக்கு எதிர் பக்கத்தில் இது அமைந்துள்ளது. நேபாளத் தலைநகர் காத்மாண்டிலிருந்து 452 கிலோமீட்டர் தூரத்திலும், நேபாளத்தின் முக்கிய நகரமான போக்ராவிலிருந்து சுமார் 251 கிலோமீட்டர் தூரத்திலும் இது உள்ளது.

இந்நுழைவாயில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படுவது, முழுவதுமாக வெளிநாட்டுக்கு திறக்கும் நிலையை உருவாக்குவதற்கும், வெளிநாட்டுக்கான பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பின் தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.