வணக்கம் சான் ஃப்ரான்சிஸ்கோ
2023-11-14 21:02:30

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 14ஆம் நாளிரவு சிறப்பு விமானத்தின் மூலம் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு, அமெரிக்காவின் சான் ஃப்ராங்சிஸ்கோவுக்குச் சென்றார். அமெரிக்க அரசுத் தலைவர் பைடனின் அழைப்பின் பேரில் செல்லும் அவர், இரு நாட்டு அரசுத் தலைவர் சந்திப்பில் கலந்துகொள்வதுடன் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளார்.

அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள சான் ஃப்ரான்சிஸ்கோ, காலிஃபோர்னிய மாநிலத்தின் 4வது மக்கள் தொகை கொண்ட நகராகும். அழகான சுற்றுச்சூழல் வாய்ந்ததால் அது, உலகின் புகழ் பெற்ற சுற்றுலா இடமாகும். தவிரவும், சான் ஃப்ராங்சிஸ்கோ, அமெரிக்காவின் மேற்கு கடற்கரையின் மிக முக்கிய நிதி மையமாகவும், உலகின் மிக முக்கிய உயர் மற்றும் புதிய தொழில் நுட்ப ஆய்வு தளமாகவும் திகழ்கிறது.