சீன பொருளாதாரத்தின் தொடர்ச்சியான மீட்சி
2023-11-14 18:30:35

30ஆவது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் நிதி அமைச்சர் கூட்டம் அமெரிக்காவின் சான் ஃப்ராங்சிஸ்கோவில் நடைபெற்றது. உலக மற்றும் பிரதேச பொருளாதார நிதி நிலைமை, நவீன வினியோக பொருளாதாரம், தொடரவல்ல நிதி, எண்ணியல் சொத்து ஆகியவை இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

சீன நிதித் துறை அமைச்சர் லன் ஃபோயன் கூறுகையில்,

உலகப் பொருளாதார மீட்சி போக்கு நிதானமற்ற நிலையில் உள்ளது. பல்வேறு தரப்புகளும், ஒட்டுமொத்த பொருளாதார கொள்கையை ஒருங்கிணைக்கவும், வர்த்தக முதலீட்டு வசதிமயமாக்கத்தை முன்னேற்றவும், திறப்புதன்மை வாய்ந்த ஆசிய-பசிபிக் மற்றும் உலக பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் வேண்டும் என்றார்.

இவ்வாண்டின் 4ஆவது காலாண்டில் சீனப் பொருளாதாரம் தொடர்ந்து மீட்சியடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.